சென்னை அணியில் இருந்து 2-வது முக்கிய வீரர் விலகல்..! என்னதான் நடக்குது..? அதிர்ச்சியில் ரசிகர்கள்.!



hrbanjan-singh-exit-from-chennai-super-kings

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து அதிரடி வீரர் ரெய்னா விலகிய நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி வீரர் அணியில் இருந்து விலகி இருப்பது சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இந்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்க இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு முயற்சிகளுக்குப் பிறகு இந்த ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் இந்த மாதம் 19 ஆம் தேதியிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற உள்ளது.

Ipl 2020

போட்டியில் பங்கேற்பதற்காக அனைத்து அணி வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை அணியும் பயிற்சியில் ஈடுபடுவதற்காக்கவும், போட்டிகளில் கலந்து கொள்வதற்காக்கவும் போட்டி நடைபெறும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு கடந்த மாதம் 21ம் தேதியே சென்றுவிட்டது. 

இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வந்த நிலையில் சென்னை அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னா தான் சென்னை அணியில் இருந்து விலகுவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். 

சென்னை அணி நிர்வாகத்துடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாகவே சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விலகுவதாகவும், சுரேஷ் ரெய்னாவின் மாமா குடும்பத்தில் ஏற்பட்ட தாக்குதல் மற்றும் மரணம் தான் சுரேஷ் ரெய்னா சென்னை அணியில் இருந்து விலகி நாடு திரும்ப காரணம் எனவும் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டன.

Ipl 2020

இந்நிலையில் சுரேஷ் ரெய்னா அணியில் இருந்து விலகியதை அடுத்து தற்போது சென்னை அணியின் மூத்த வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங் தான் அணியில் இருந்து விலகுவதாக திடீரென அறிவித்துள்ளார். தனது தனிப்பட்ட காரணங்களுக்காகவே தான் சென்னை அணியில் இருந்து விலகுவதாக ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.

சென்னை அணி வீரர்கள் அடுத்தடுத்து அணியில் இருந்து விலகுவது சென்னை அணி ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.