2020 ஐபிஎல் சீசனில் அதிகப்படியான சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் தரவரிசை பட்டியல்.!

2020 ஐபிஎல் சீசனில் அதிகப்படியான சிக்ஸர்கள் அடித்த வீரர்களின் தரவரிசை பட்டியல்.!


highest sixers in 2020 ipl

ஐபிஎல் 13 வது சீசன் T20 போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை  போட்டிகள் நடைபெற்று அணைத்து அணிகளும் 13 லீக் ஆட்டங்கள் ஆடியுள்ளனர். இன்னும் அணைத்து அணிகளுக்கும் தலா ஒரு லீக் போட்டி மட்டும் மீதி உள்ளது. இந்தநிலையில் இதுவரை ஆடிய ஆட்டங்களில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சஞ்சு சாம்சன் விளையாடிய 13 ஆட்டங்களில் 26 சிக்ஸர்கள் அடித்து இந்தவருட ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக முதல் இடத்தில் உள்ளார்.

இதனையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் நிக்கோலஸ் பூரான் விளையாடிய 13 ஆட்டங்களில் 25 சிக்ஸர்கள் அடித்து இந்தவருட ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக இரண்டாவது இடத்தில் உள்ளார். இவரைத்தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் இஷான் கிஷான் விளையாடிய 11 ஆட்டங்களில்  24 சிக்ஸர்கள் அடித்து இந்தவருட ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக மூன்றவது இடத்தில் உள்ளார்.

sixers

இதனையடுத்து இதனையடுத்து கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கிறிஸ் கெயில் விளையாடிய 6 ஆட்டங்களில் 23 சிக்ஸர்கள் அடித்து இந்தவருட ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக நான்காவது இடத்தில் உள்ளார். அதேபோல் குறைந்த ஆட்டங்களில் அதிகப்படியான சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற பெருமையையும் கிறிஸ் கெயில் பெற்றுள்ளார். இதனையடுத்து 2020 ஐபிஎல் சீசனில் அதிக ரன்களை அடித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கே.எல்.ராகுல் விளையாடிய 13 ஆட்டங்களில் 22 சிக்ஸர்கள் அடித்து இந்தவருட ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக ஐந்தாவது இடத்தில் உள்ளார்.