இந்தியா விளையாட்டு WC2019

2019 உலகக்கோப்பை லீக் சுற்று முடிவுபெற்ற நிலையில், அதிக ரன்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் எடுத்தது யார்?

Summary:

highest run and wicket


2019 உலகக்கோப்பை சாம்பியனை தீர்மானிக்க இன்னும் 3 முக்கிய போட்டிகளே மீதமுள்ள நிலையில் நாளை முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதுகின்றன. இதுவரை நடைபெற்ற லீக் சுற்று முடிவில், அதிக ரன்கள் எடுத்தவர்கள் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் யார் என்று பார்ப்போம்.

நேற்று முன்தினம் சனிக்கிழமை நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தியதன் மூலம் 15 புள்ளிகள் பெற்று, புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்கவைத்துக்கொண்டது. முதல் இடத்தில் இருந்த ஆஸ்திரேலிய அணி தனது கடைசி லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணியிடம் தோல்வியடைந்ததால் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டது.

rohit and starc க்கான பட முடிவு

லீக் சுற்று முடிவில் அதிக ரன்கள் எடுத்தவர்களின் பட்டியல்:

 ரோஹித் ஷர்மா (IND)   - 647 ரன்கள் [5 சதங்கள், 1 அரைசதம்]
 டேவிட் வார்னர்  (AUS) - 638 ஓட்டங்கள் (3 சதங்கள், 3 அரைசதங்கள்)
ஷகிப் அல் ஹசன் (BANG)  - 606 ஓட்டங்கள் (2 சதங்கள், 5 அரைசதங்கள்)
ஆரோன் ஃபிஞ்ச்(AUS)- 507 ஓட்டங்கள் (2 சதங்கள், 3 அரைசதங்கள்)
ஜோ ரூட்  (ENG)          - 500 ஓட்டங்கள் (2 சதங்கள், 3 அரைசதங்கள்)

அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள்:


மிட்செல் ஸ்டார்க்(AUS)  - 26 விக்கெட்டுகள்
முஸ்தாபிசுர் ரஹ்மான்(BANG)  - 20 விக்கெட்டுகள் 
பெர்குசன்  - 17 விக்கெட்டுகள்(NEWZ)
ஜஸ்பிரிட் பும்ரா - 17 விக்கெட்டுகள்(IND)
முகமது அமிர்  - 17 விக்கெட்டுகள் (PAK)
 


Advertisement