விளையாட்டு

ஆமாங்க!! அவரு இல்லாதது சென்னை அணிக்கு பெரிய பின்னடைவு தான்.!! சென்னை அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங் கருத்து..!

Summary:

சென்னை அணியில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் ஹேசல்வுட்டு விலகியது சென்னை அணிக்கு பின்னடைவு தான

சென்னை அணியில் இருந்து ஆஸ்திரேலியா வீரர் ஹேசல்வுட்டு விலகியது சென்னை அணிக்கு பின்னடைவு தான் என கூறியுள்ளார் அணியின் பயிற்சியாளர் பிளெம்மிங்.

ஐபில் சீசன் 14 T20 போட்டிகள் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. கடந்த 10 ஆம் தேதி சென்னை - டெல்லி அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் சென்னை அணி வலுவான ரன்கள் எடுத்திருந்ததும் சரியான பந்து வீச்சு இல்லாததால் டெல்லி அணியுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

மேலும் சென்னை அணியின் பந்து வீச்சு குறித்து பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இதுபற்றி சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெம்மிங் கூறுகையில், ஆஸ்திரேலியா வீரர் ஹேசல்வுட்டு சென்னை அணியில் இருந்து விலகியது அணிக்கு பெரும் பின்னடைவு என கூறியுள்ளார்.

மேலும் லுங்கி இங்கிடி தற்போது தனிமைப்படுத்திக்கொண்டிருப்பதால் அவரால் முதல் போட்டியில் விளையாட முடியவில்லை. அடுத்த போட்டியில் அவர் விளையாட மாட்டார். அதேபோல் ஹேசல்வுட்டுக்கு பதிலாக அணியில் சேர்க்கப்பட்டுள்ள பெஹரன்டார்ஃப் வந்தாலும் அவரும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும்.

இதனால் சென்னை அணி இன்னும் சில போட்டிகளில் இந்திய பவுலர்கள் மற்றும் சாம் கர்ரன் ஆகியோரை வைத்துதான் சமாளிக்க வேண்டும் எனவும், ஆனால் சென்னை அணியை பற்றி குறைத்து எடைபோட வேண்டாம் எனவும் விரைவில் சென்னை அணி நல்ல பார்முக்கு திரும்பும் எனவும் பிளெம்மிங் கூறியுள்ளார்.


Advertisement