விளையாட்டு

ரோகித் சர்மாவின் வளர்ச்சிக்கு இவர் ஒருவர் தான் காரணம்! கௌதம் கம்பீர் ஓப்பன் டாக்!

Summary:

Goutham gampir talk about rohit sharma

ரோகித் சர்மாவின் வளர்ச்சிக்கு மகேந்திர சிங் தோனி தான் காரணம் என்று இந்திய அணியின் கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார்.

 இந்திய அணியின் அதிரடி மட்டையாளர் டான் ரோகித் சர்மாவின் முன்னேற்றம் குறித்து முன்னாள் இந்திய அணி துவக்க வீரர் கவுதம் காம்பிர்  தெரிவித்துள்ளார். இது குறித்து கௌதம் கம்பீர் கூறுகையில், ஒரு நாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் தற்போது உலகின் சிறந்த பேட்ஸ்மேன் ரோகித் சர்மா தான். 

 ரோகித் சர்மா ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் அடித்த ஒரே வீரர், ஒரு உலக கோப்பையில் 5 சதங்கள் அடித்த முதல் வீரர் ரோகித் தான். விராட் கோலியையும், ரோகித் சர்மாவையும் ஒப்பிட்டு பார்ப்பது கடினம். ரோகித் சர்மா இந்த அளவுக்கு உயர்ந்த நிலையை எட்டியிருக்கிறார் என்றால், அதற்கு காரணம் முன்னாள் கேப்டன் தோனி தான் என தெரிவித்துள்ளார். 

ஆரம்ப காலத்தில் ரோகித் சர்மா அணியில் இடம் பெறாத போது கூட அவரிடம் பேசி தோனி ஊக்கப்படுத்திக் கொண்டே இருப்பார். அவரை ஒரு போதும் ஓரங்கட்டியது கிடையாது. அந்த சமயத்தில் வேறு எந்த வீரருக்கும் இவ்வளவு ஆதரவு அவர் கொடுத்ததில்லை என கௌதம் கம்பீர் தெரிவித்துள்ளார். 


Advertisement