ஒருநாள், டி20 அணியில் அஸ்வினைச் சேர்க்காதது துரதிர்ஷ்டமானது.! வேதனையில் கவுதம் கம்பீர்.!

ஒருநாள், டி20 அணியில் அஸ்வினைச் சேர்க்காதது துரதிர்ஷ்டமானது.! வேதனையில் கவுதம் கம்பீர்.!


goutham-gambir-talk-about-aswin

இங்கிலாந்து அணிக்கு எதிராக நடந்த 2 டெஸ்டிலும் சேர்த்து அஸ்வின் 17 விக்கெட் வீழ்த்தினார். முதல் போட்டியில் 9 விக்கெட்டும், 2-வது டெஸ்டில் 8 விக்கெட்டும் கைப்பற்றினார். மேலும் 2-வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக இருந்தார் அஸ்வின்.

டெஸ்ட் தொடருக்கான வீரர் அஸ்வின் என முத்திரை குத்தப்பட்டு அவர் டெஸ்ட் போட்டிகளுக்கு மட்டுமே தேர்வு செய்யப்படுகிறார். அஸ்வின் கடைசியாக 2017-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டியில் விளையாடியதுதான் அஸ்வின் கடைசியாகப் பங்கேற்றதாக இருந்தது.

அதன்பின் கடந்த 4 ஆண்டுகளாக அஸ்வினுக்கு ஒருநாள், டி20 அணியில் பங்கேற்க இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்கப்படவில்லை. ஆனாலும் தனக்கு டெஸ்ட் தொடரில் கிடைத்த வாய்ப்பை முழுமையாக அளித்து ஒருநாள், டி20 போட்டிக்கும் தகுதியானவர் என்பதை நிரூபித்து வருகிறார் அஸ்வின்.

aswinஇந்தநிலையில், இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் அஸ்வின் தேர்வாகாதது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் பேசியுள்ளார். அவர் கூறுகையில், ''இங்கிலாந்துக்கு எதிரான டி20, ஒருநாள் தொடரில் அஸ்வினை இந்திய அணியில் தேர்வு செய்யாமல் ஒதுக்கியது துரதிர்ஷ்டமானது. 

டெஸ்ட் போட்டியில் 400 விக்கெட்டுகளை நெருங்கிய வீரர், 5 டெஸ்ட் சதங்களை அடித்தவர். ஆனால், அவர் தொடர்ந்து ஒருநாள், டி20 அணியில் மட்டும் புறக்கணிக்கப்படுவது வேதனையானது உள்ளது" எனத் தெரிவித்துள்ளார் இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர்.