விராட்கோலியின் மனைவி அனுஸ்கா ஷர்மா வேறொருவரின் மனைவியா? குழப்பத்தை ஏற்படுத்திய கூகுள்.

விராட்கோலியின் மனைவி அனுஸ்கா ஷர்மா வேறொருவரின் மனைவியா? குழப்பத்தை ஏற்படுத்திய கூகுள்.


Google images show anushka sharma is Rashid khan wife

ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் மனைவி குறித்து கூகுள் புகைப்படத்தில் தேடும்போது நடிகையும், இந்திய கிரிக்கெட் அணியின் கேபட்டனுமான விராட்கோலியின் மனைவி அனுஸ்கா ஷர்மாவின் புகைப்படம் வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

உலகளவில் முன்னணி தேடுபொறியாக உள்ளது கூகுள். என்னதான் தொழில்நுட்பத்தில் தரம் வாய்ந்த நிறுவனமாக கூகுள் இருந்தாலும் சில சமயங்களில் இதுபோன்ற சிக்கல்கள் வரத்தான் செய்கிறது. இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் ரஷீத் கான் மனைவி குறித்து கூகிளில் தேடும்போது ரஷீத் கானின் மனைவி படத்திற்கு பதிலாக நடிகை அனுஸ்கா ஷர்மாவின் புகைப்படம் ரஷீத் கானின் புகைப்படத்துடன் இணைந்து வருகிறது.

Google images

தனக்கு மிகவும் பிடித்த நடிகைகள் அனுஸ்கா ஷர்மா, ப்ரீத்திசிந்தா என ரஷீத் கான் அண்மையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இது தொடர்பான செய்திகள் பல்வேறு இணையதளங்களில் வெளியானநிலையில் அந்த தகவல் மற்றும் புகைப்படங்களை வைத்து ரஷீத் கானின் மனைவி அனுஸ்கா ஷர்மா என கூகுள் தகவல்கள் மாற்றியமைக்கப்பட்டிருக்கலாம் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Google images

இதேபோன்று சில வருடங்களுக்கு முன்பு, உலகின் டாப் 10 கிரிமினல்கள் யார் என்று தேடும்போது இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் புகைப்படம் கூகிளில் வந்தது குறிப்பிடத்தக்கது.