ஓய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கெய்ல் அதிரடி பதில்! குழப்பத்தில் ரசிகர்கள்

ஓய்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு கெய்ல் அதிரடி பதில்! குழப்பத்தில் ரசிகர்கள்


Gayle has no idea of retirement now

39 வயதாகும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல் எப்போது ஓய்வு பெறப்போகிறார் என்ற கேள்வி கிரிக்கெட் ரசிகர்களிடையே எழத் துவங்கிவிட்டது. இதுகுறித்து நேரடியாகவே நேற்று அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. 

அதற்கு பதிலளித்த கெய்ல், "ஓய்வு குறித்து எந்த அறிவிப்பும் நான் வெளியிடவில்லையே. நான் இன்னும் அணியில் இருக்கிறேன்" என தான் தற்போது ஓய்வு பெறப்போவதில்லை என்பதனை தெளிவுபடுத்தியுள்ளார். 


ஆனால் கெய்லின் இந்த பதில் ரசிகர்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக கெய்ல் பல சாதனைகளை புரிந்திருந்தாலும் அவரால் தற்போது முழு உடல் தகுதியுடன் விளையாட முடிவதில்லை. 

இந்தியாவிற்கு எதிரான டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் கடைசி போட்டியில் தான் அரைசதம் அடித்தார் கெய்ல். மற்ற போட்டிகளில் தடுமாறியது அனைவருக்கும் தெரிந்ததே. வெஸ்ட் இண்டீஸ் அணியை பொறுத்தவரை தற்போது மிகவும் பலவீனமாக உள்ளது. 

chris gayle

எனவே கெய்ல் அடுத்து வரும் இளைஞர்களுக்கு வழிவிடாமல் இன்னும் அணியில் நீடிக்க விரும்புகிறார் என பல ரசிகர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். அதிலும் சிலர் கெய்லிற்கு ஆதரவாகவும் பேசி வருகின்றனர். கெய்லை தவிற அணியில் இருக்கும் மற்ற இளம் வீரர்கள் கெய்ல் அளவிற்கு சிறப்பாக ஆடுவதில்லையே. 

அப்படி இருக்க கெய்ல் ஏன் உடனே ஓய்வு பெற வேண்டும் என கேள்வி எழுப்புகின்றனர். இதுவரை 301 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள கெய்ல் 10480 ரன்கள் எடுத்துள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒருவர் ஆடிய அதிக போட்டிகள் மற்றும் எடுத்த அதிக ரன்கள் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.