ஓப்பனிங்கே சரியில்லை..! அவர் இந்திய அணியின் சொத்து..! அவருக்கு வாய்ப்பு கொடுங்க.! கவுதம் கம்பீர் காட்டம்.!

ஓப்பனிங்கே சரியில்லை..! அவர் இந்திய அணியின் சொத்து..! அவருக்கு வாய்ப்பு கொடுங்க.! கவுதம் கம்பீர் காட்டம்.!



Gawtham gambir commenting about indian opening pair

நியூசிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி T20 போட்டியை அடுத்து ஒருநாள் போட்டிகளில் விளையாடிவருகிறது. இன்று நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இந்நிலையில் பேட்டிங் வரிசையில் இந்திய அணி எடுத்த முடிவு குறித்து முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

இன்றைய ஆட்டத்தில், தொடக்க ஆட்டக்காரர்களாக, இளம் வீரர்களான பிரித்விஷா மற்றும் மயங்க் அகர்வால் சர்வதேச ஒருநாள் போட்டியில் அறிமுகமாகினர். ஆனால் அவர்கள் இருவரும் எதிர்பார்த்த அளவு விளையாடவில்லை. எப்போதும் தொடக்க வீரராக களமிறங்கும் KL ராகுல் 5 வது வீரராக களமிறக்கப்பட்டார்.

kl rahul

இது சரியான முடிவு இல்லை என்றும், KL ராகுல் - மயங் அகர்வால் இருவரும் இணைந்து ஓப்பனிங் செய்வதே சிறந்தது. அதுமட்டும் இல்லாமல், KL ராகுல் இந்திய அணிக்கு கிடைத்த சொத்து. அவரை T20 போட்டிகளில் விக்கெட் கீப்பராக பயன்படுத்தலாம். ஆனால், ஒருநாள் போட்டிகளிலும் அவரை விக்கெட் கீப்பராக பயன்படுத்தினால் அவர் மீது சுமை அதிகமாகும். அதனால் அவரால் சிறப்பாக விளையாட முடியமால் போகலாம்.

இவ்வாறு செய்வதன் மூலம் ஒருநாள் போட்டிகளில் ரிஷப் பந்திற்கு வாய்ப்பு கொடுக்கலாம் எனவும் காம்பிர் கூறியுள்ளார்.