இந்தியா விளையாட்டு

ரசிகர்களே இல்லாமல் ஐபிஎல் போட்டி! கங்குலி கொடுத்த புதிய தகவல்!

Summary:

Ganguly talk about IPL

உலகத்தையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் பரவலால் உலகின்  பல்வேறு நாடுகளில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் ஊரடங்கு, மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்குத் தடை எனப் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதனால் உலகின் அனைத்து நாடுகளிலும் அனைத்து விதமான விளையாட்டு போட்டிகளும் நிறுத்தப்பட்டுள்ளன. ஒலிம்பிக் தொடங்கி,  ஐபிஎல், உள்ளூர் விளையாட்டுப் போட்டிகள் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

கொரோனா காரணமாக, இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தள்ளிப்போன நிலையில், இனி ஐபிஎல் நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.  இந்தநிலையில், 2020ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியை இந்தாண்டே நடத்த கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் விரும்புவதாகவும், வீரர்களும், அணி உரிமையாளர்களும் அதையே எதிர்பார்ப்பதால், விரைவில் அதுகுறித்து முடிவு எடுக்கப்பட இருப்பதாகவும் கங்குலி குறிப்பிட்டுள்ளார்

இதுகுறித்து கங்குலி கூறுகையில், ஐபிஎல் தொடரை நடத்துவதற்கான அனைத்து சாத்தியங்கள் குறித்தும், பிசிசிஐ ஆராய்ந்து வருகிறது. காலி மைதானத்திலாவது தொடரை நடத்த முடியுமா என ஆலோசித்து வருகிறோம். தொடரில் பங்கேற்க உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வீரர்கள் ஆவலாக இருக்கிறார்கள் , ஐபிஎல் குறித்து பிசிசிஐ விரைவில் அறிவிக்கும் எனவும் கங்குலி தெரிவித்தார். 


Advertisement