
புதிய அத்தியாத்தை துவங்கும் கங்குலி.! பாஜகவில் இணைகிறாரா.? முடிவுக்கு வந்த குழப்பம்.!
கடந்த 2019ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பிசிசிஐ தலைவராக கங்குலி பதவி ஏற்றார். இந்தநிலையில் பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து கங்குலி ராஜினாமா செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இதுதொடர்பாக பிசிசிஐ தலைவராக இருந்து வரும் கங்குலி தனது டுவிட்டர் பதிவில், 30 ஆண்டுகள் கிரிக்கெட் பயணத்தை நிறைவு செய்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.
மேலும், இந்த பயணத்தில் உடன் இருந்த ஒவ்வொரு நபருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் பலருக்கும் உதவும் வகையில் ஒன்றை தொடங்க திட்டமிட்டு இருப்பதாகவும், இந்த புதிய அத்தியாத்திற்கும் அனைவரும் ஆதரவு இருக்கும் என நம்புவதாக பதிவிட்டிருந்தார். சவுரவ் கங்குலியின் இந்த பதிவால் அவர் பிசிசிஐ தலைவர் பொறுப்பில் இருந்து விலகக் கூடும் என்று பரவலாக விவாதங்கள் எழுந்தது.
இதனால் கங்குலி பிசிசிஐ தலைவர் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்து அரசியலில் குதிக்க போவதாக தகவல் வெளியானது. மேலும், கொல்கத்தா சென்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சவுரவ் கங்குலியின் வீட்டிற்குச் சென்று அவருடன் கலந்துரையாடினார். இதனால் கங்குலி பாஜகவில் இணைவார் என்று பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில் தான் ஒரு உலகளாவிய புதிய கல்வி செயலியை ஆன்லைனில் அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்தியாளர்கள் சந்திப்பில் சவுரவ் கங்குலி தெரிவித்துள்ளார். கங்குலியின் செய்தியாளர் சந்திப்பு மூலம் பலரது குழப்பம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
Advertisement
Advertisement