உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கு இப்போது சாத்தியமில்லை.. பிசிசிஐ தலைவர் கங்குலி அதிரடி அறிவிப்பு!

உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களுக்கு இப்போது சாத்தியமில்லை.. பிசிசிஐ தலைவர் கங்குலி அதிரடி அறிவிப்பு!



Ganguly announced about national cricket games

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் அனைத்து வகையான விளையாட்டு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டன.

மார்ச் மாதத்திற்கு பிறகு இந்தியாவில் உள்நாட்டு மற்றும் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. ஐபிஎல் 2020 டி20 தொடரும் யூஏஇக்கு மாற்றப்பட்டுள்ளது.

ganguly

இந்நிலையில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி உள்நாட்டு தொடர்கள் குறித்த கடிதம் ஒன்றை அனைத்து மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு அனுப்பியுள்ளார்.

அந்த கடிதத்தில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களான சையத் முஷ்டாக் அலி கோப்பை (டி20), விஜய் ஹசாரே கோப்பை (ஒருநாள்), ரஞ்சி கோப்பை (டெஸ்ட்) உட்பட எந்த உள்நாட்டு தொடர்களும் கொரோனா அசாதாரண சூழ்நிலை நீங்கும் வரை நடத்தப்படாது என தெரிவித்துள்ளார். இதனால் எந்த வகையான உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களும் தற்போது நடைபெற வாய்ப்பில்லை.