இந்தியா விளையாட்டு

மருத்துவமனையில் கங்குலி.! தற்போதைய நிலை என்ன.? மருத்துவர்கள் அப்டேட்.!

Summary:

கங்குலி அடுத்த 24 மணி நேரத்துக்கு கண்காணிப்பில் இருப்பார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவரும், முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி நேற்று திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சவுரவ் கங்குலிக்கு இதயத்தில் 3 அடைப்புகள் இருந்ததாகவும் ஒரு அடைப்பில் ஸ்டண்ட் பொருத்தப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் தற்போது சீராக உள்ளார். 24 மணி நேரம் கண்காணிப்பில் இருப்பார். அவரது இருதயத்தில் 3 அடைப்புகள் உள்ளநிலையில் அதற்கான சிகிச்சை அவருக்கு அளிக்கப்பட்டு வருகிறது. 

அடுத்தகட்டமாக என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி திங்கள்கிழமை ஆலோசனை நடைபெறுகிறது. அவர் அபாயகர கட்டத்தில் இல்லை என மருத்துவர் அஃதாப் கான் தெரிவித்துள்ளார். இந்நிலையில் நேற்று அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு நெகட்டிவ் ரிசல்ட் வந்துள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் நேற்றிரவு அவர் நிம்மதியாக உறங்கியதாகவும் மருத்துவர்கள் கூறினர். தொடர்ந்து அவரது நிலை கண்காணிப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.


Advertisement