"அந்த மனசு தான் சார் கடவுள்" - வெள்ள நிவாரண பணிக்கு ரூ.10 இலட்சம் வழங்கிய நடிகர் சிவகார்த்திகேயன்.!
டெஸ்ட் கிரிக்கெட்டை விட ஒரு நாள் கிரிக்கெட்டின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது - முன்னாள் இந்திய வீரர் வருத்தம்!
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணியின் முன்னணி ஆல்ரவுண்டர் ஆன பென் ஸ்டோக்ஸ் ஓய்வினை அறிவித்தது ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மீதான நம்பிக்கையை கலங்கடித்து உள்ளது. 31 வயதே ஆன பென் ஸ்டோக்ஸ் இன் இந்த முடிவின் பின்னணிதான் பலருக்கும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
தனது ஓய்வு அறிக்கையில், மூன்றுவிதமான சர்வதேச போட்டிகளில் என்னால் கலந்து கொள்ள இயலவில்லை. அடுத்தடுத்து நடைபெறும் கிரிக்கெட் தொடர்களில் முழுமையாக ஈடுபடுத்திக்கொள்ள என்னுடைய உடல் நிலையும் ஒத்துப்போவதாக இல்லை என்ற காரணத்தை பென் ஸ்டோக்ஸ் தெரிவித்துள்ளார்.
அவருடைய இந்த அறிவிப்பால் சர்வதேச ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக இருப்பதாக பலரும் அச்சப்படுகின்றனர். மேலும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிரக்யன் ஓஜா "சர்வதேச டெஸ்ட் போட்டிகளின் நிலைமையை விட ஒருநாள் போட்டிகளின் நிலைமை மிக மோசமான நிலையில் உள்ளது" என கூறியுள்ளார்.