விறுவிறுப்பான கடைசி நாள் ஆட்டம்! இந்திய பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்களா! ஆவலுடன் ரசிகர்கள்!

விறுவிறுப்பான கடைசி நாள் ஆட்டம்! இந்திய பந்துவீச்சாளர்கள் சாதிப்பார்களா! ஆவலுடன் ரசிகர்கள்!



first-test-las-day

இந்தியா-ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதலாவது டெஸ்டில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 250 ரன்கள் எடுத்தது.  இந்திய அணியின் புஜாரா மட்டும் சிறப்பாக ஆடி 123 ரன்கள் எடுத்தார். 

அதனைத்தொடரந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய ஆஸ்திரேலிய அணி  235 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அந்த அணியின் ஹெட் மட்டும் அரைசதம் அடித்து அதிகபட்சமாக 72 நாட்கள் எடுத்தார்.

test match

இந்திய அணி சார்பில் பும்ரா மற்றும் அஸ்வின் 3 விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா மற்றும் சமி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

அதனைத் தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ராகுல் மற்றும் விஜய் முதல் விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்தனர். அதன்பின் விஜய் 18 ரன்களிலும் ராகுல் 44 ரன்களிலும் அவுட் ஆகினர். அவர்களைத் தொடர்ந்து ஜோடி சேர்ந்த புஜாரா மற்றும் கோலி நிதானமாக ஆடினர். 

test match

ஆனால் கோலி 34 ரன்களில் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தனர். பின்னர் களமிறங்கிய ரஹானே 70 ரன்களும் மற்றும் புஜாரா 71 ரன்கள், பண்ட் 28 ரன்கள் எடுத்து அவுட்டாகினர். இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 307 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்துவீச்சாளர் நாதன் லியான் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

test match

372 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை துவங்கிய ஆஸ்திரேலிய அணி 4-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 104 ரன்கள் எடுத்தது. 

test match

பின்னர் இன்று துவங்கிய கடைசி நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி மேலும் 3 விக்கெட்டுகளை இழந்து 218 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் மீதம் உள்ள ஓவர்களில் 3 விக்கெட்டுகளை எடுத்தால் இந்திய அணிக்கு வெற்றி வாய்ப்பும் 105 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலிய அணிக்கு வெற்றி வாய்ப்பும் உள்ளது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பில் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.