விளையாட்டு

முதல் ஒருநாள் போட்டி மழையால் ரத்து!

Summary:

First odi abandoned due to rain

நேற்று இந்தியா - மேற்கு இந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்டது. 

மழையின் காரணமாக ஆட்டம் சற்று தாமதமாக தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. 13 ஓவர்கள் முடிவில் மேற்கு இந்திய தீவுகள் அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 54 ரன்கள் எடுத்து இருந்தனர்.

வழக்கத்திற்கு மாறாக மிகவும் பொருமையாக ஆடிய கிறிஸ் கெய்ல் 31 பந்துகளில் 4 ரன்கள் மட்டுமே எடுத்து குல்தீப் பந்தில் ஆட்டமிழந்தார். பின்னர் மழை குறுக்கிடவே ஆட்டம் தடைபட்டது. 

மழை விடாமல் பெய்ததால் நேற்றைய முதல் ஒருநாள் போட்டி முடிவுகள் இன்றி கைவிடப்பட்டது. 


Advertisement--!>