விளையாட்டு

நான் திரும்பி வந்துடேன்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏ.பி.டி.!

Summary:

நான் திரும்பி வந்துடேன்... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த ஏ.பி.டி.!

கடந்த 2011ம் ஆண்டு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட ஏ.பி.டிவில்லியர்ஸ், இதுவரை 11 சீசனில் ஆர்சிபி அணிக்காக விளையாடி இரண்டு சதங்கள் மற்றும் 37 அரைசதங்கள் உட்பட 4,491 ரன்கள் குவித்துள்ளார்.

ஐபிஎல் 2021க்குப் பிறகு தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கேப்டனும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் விக்கெட் கீப்பருமான ஏபி டி வில்லியர்ஸ் அனைத்து வகையான ஆட்டங்களில் இருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.

இந்தநிலையில் மிகுந்த வருத்ததில் இருக்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி தரும் வகையில் ஏ.பி.டிவில்லியர்ஸ் தெரிவித்துள்ள கருத்து ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்துயுள்ளது. அதில், நான் ஐபிஎல்-லில் மீண்டும் பங்குபெற போவதாக விராட் கோலி உறுதிப்படுத்திய செய்தியை கேட்டதில் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் உண்மையை சொல்லவேண்டும் என்றால் நாங்கள் எதையும் இன்னும் உறுதிசெய்யவில்லை. நான் நிச்சியமாக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் இருப்பேன் ஆனால் என்னவாக இருப்பேன் என்று எனக்கு தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

 


Advertisement