விளையாட்டு WC2019

வெற்றிபெற்றது நியூசிலாந்து அணி தான்! கொந்தளித்த பிரபல நடிகர்!

Summary:

famous actor talk about worldcup final

நேற்றைய உலக கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 241 ரன்கள் எடுத்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்த இங்கிலாந்து அணியும் 50 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 241 ரன்கள் அடித்தது. 

நேற்றைய ஆட்டம் டையில் முடிந்ததால் சூப்பர் ஓவர் அறிவிக்கப்பட்டது. பின்னர் சூப்பர் ஓவரும் 15-15 ரன்களால் டையில் முடிந்தது. அதனைத் தொடர்ந்து அதிக பவுண்டரிகள்(24/16) அடித்ததன் அடிப்படையில் இங்கிலாந்து அணி அதிர்ஷ்டவசமாக சாம்பியன் பட்டத்தை வென்றது. 

ஐசிசியின் இந்த விதிமுறை மற்றும் ஓவர் த்ரோவில் பந்து பேட்ஸ்மேனின் பேட்டில் பட்டு சென்றால் ரன் கொடுக்கும் விதிமுறையால் தான் நியூசிலாந்து அணி கோப்பையை தவற விட்டது என அனைவரும் கொந்தளித்து வருகின்றனர். 

இந்தநிலையில் உலகக்கோப்பை இறுதி ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்ற நிலையில் ஐசிசியை கடுமையாக சாடியுள்ளார் பிரபல நடிகரும், இயக்குனருமான அனுராக் கஸ்யப். தமிழில் வெளியான இமைக்கா நொடிகள் திரைப்படத்தில் நடித்துள்ள அனுராக், ஏராளமான இந்தி படங்களில் நடித்துள்ளதுடன் பல படங்களை இயக்கியுள்ளார். 

உலகக்கோப்பை இறுதி போட்டி குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஐசிசி, கிரிக்கெட்டை வெறும் பேட்ஸ்மேன் விளையாட்டாக உருவாக்கிவிட்டது. விக்கெட்கள் ஒரு பொருட்டாகவே பார்க்கப்படுவதில்லை, இதில் பேட்ஸ்மேன் எவ்வளவு ரன்கள் எடுக்கிறார்கள் என்பதே முக்கியமாக உள்ளது, விக்கெட்கள் என்பது தாழ்ந்த சாதியை நடத்துவது போல உள்ளது.

பந்துவீச்சும், பேட்டிங்கும் ஒன்றாக பார்க்கப்பட்டால் நியூசிலாந்து அணி வெற்றி பெற்ற அணியாக இருந்திருக்கும் என தெரிவித்துள்ளார்.


Advertisement