விஜய் சேதுபதியின் தக் லைப் மொமண்ட்ஸ்; விஜய் டிவி வெளியிட்ட வீடியோ உள்ளே.!
WCT20: இந்திய மகளிர் அணி மோசமான ஆட்டம்; அபாரமாக ஆடிய இங்கிலாந்து அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது
மகளிர் உலகக் கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இன்றைய 2வது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணியை தோற்கடித்து இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. இறுதி போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணி ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது.
அரையிறுதிப் போட்டியின் 2வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை இந்திய மகளிர் அணி எதிகொண்டது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
ஆட்டத்தின் துவக்கத்தில் இந்திய மகளிர் அணியில் மட்டையாளர்கள் சற்று நிதானமாக ஆடி வந்தனர். 14 முடிவில் இந்திய அணி 89 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. மந்தனா 34 ரன்களும் ஜெமிமா 26 ரன்களும் எடுத்திருந்தனர். அதன் பிறகு வந்த வீராங்கனைகள் யாரும் நிலைத்து நின்று ஆட முடியவில்லை. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த இந்திய அணி 19.3 ஓவர்களில் 112 ரன்கள் மட்டுமே எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
113 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி வீராங்கனைகள் துவக்கத்தில் விக்கெட்டுகளை இழந்து 5 ஓவர்களில் 24 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தனர். அதன் பிறகு ஜோடி சேர்ந்த ஜோன்ஸ் மற்றும் நடாலி இருவரும் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணியின் வெற்றிக்கு உதவினர்.
தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஜோன்ஸ் மற்றும் நடாலி இருவரும் அரைசதம் அடித்தனர். இறுதியில் இங்கிலாந்து அணி 17.1 ஓவர்களில் 2 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து இங்கிலாந்து மகளிர் அணி அடுத்து நடைபெறவிருக்கும் இறுதி போட்டியில் ஆஸ்திரேலிய மகளிர் அணியை எதிர்கொள்கிறது.