இந்தியா விளையாட்டு

இது எங்களுக்கு வெட்கக்கேடு.! தோல்வி குறித்து இங்கிலாந்து கேப்டன் ஓப்பன் டாக்.!

Summary:

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில

இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி டெஸ்ட், டி20, ஒருநாள் போட்டிகளில் ஆடிவருகிறது.  டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் தொடரை கைப்பற்றியது இந்திய அணி. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையேயான 3 ஆட்டங்கள் அடங்கிய ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.

இதில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி புனேயில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 317 ரன்கள்  எடுத்தது.

இதனையடுத்து, 318 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஆரம்பத்தில் அதிரடி காட்டியது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக பேர்ஸ்டாவ் 94 ரன்கள் எடுத்தார். இதனையடுத்து இங்கிலாந்து அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது. 42.1 ஓவர்களுக்கு இங்கிலாந்து அணி 251 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து தோல்வியடைந்தது. 

இதுகுறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் மார்கன், நாங்கள் நிறைய தவறுகள் செய்துவிட்டோம். இந்தப் போட்டியின் பல கட்டங்களில் நாங்கள் சிறப்பாகவே விளையாடினோம். ஆனால் பேட்டிங்கின்போது எங்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது. ஆனால் அதனை பயன்படுத்த தவறியது வெட்கக்கேடானது. அதேபோல புனே பிட்ச் மிகவும் பிரமாதமாக இருந்தது. பேர்ஸ்டோ மிகவும் சிறப்பாக விளையாடினார். அதேபோல இந்திய அணி சிறப்பாக பந்துவீசினார்கள் என தெரிவித்தார்.


Advertisement