"வீடியோவை டெலிட் பண்ணு.. காசு தரேன்." insta பிரபலத்திடம் நடிகை நயன்தாரா பேரம்.!
இங்கிலாந்து வீரர் பீட்டர்சன் ட்விட்டரில் உருக்கம்.. கடந்து செல்லுங்கள் விராட் கோலி வாழ்வில் நிறைய உள்ளது...!
வீராட் கோலி கிரிக்கெட்டில் செய்ததை மற்றவர்கள் கனவில் மட்டுமே செய்ய முடியும் என பீட்டர்சன் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி சமீபகாலமாக போட்டிகளில் சரிவர விளையாடுவதில்லை என்று விமர்சனங்கள் வருகிறது. கோலி நவம்பர் 2019-ல் கடைசியாக தான் சதம் அடித்தார். அதன் பிறகு அவர் சதமடிக்கவில்லை.
இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான தொடரிலும் விராட் கோலி சரிவர ஆடாததால் அவர் மீது விமர்சனங்கள் எழுந்தவண்ணம் உள்ளது. இந்நிலையில், இங்கிலாந்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கெவின் பீட்டர்சன் கோலிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பீட்டர்சன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், சென்று கொண்டே இருங்கள் பெரிய மனிதரே. கிரிக்கெட்டில் நீங்கள் செய்தவற்றை மற்ற மக்கள் கனவில் மட்டும் தான் செய்யமுடியும் என்று கூறியுள்ளார்.
அதேபோல், பீட்டர்சன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நண்பரே, நீங்கள் ஆடிய ஆட்டத்தை மற்றவர்களால் நினைத்துப்பார்க்க மட்டுமே முடியும். எனவே பெருமிதம் கொள்ளுங்கள், உயரமாக நடந்து வாழ்க்கையை மகிழுங்கள். கிரிக்கெட்டின் குமிழியை விட பெரிது நிறைய உள்ளது. நீங்கள் மீண்டு வருவீர்கள் விராட் கோலி"என பதிவிட்டுள்ளார்.