மோதிக்கொண்ட விராட்கோலி - பட்லர்.. அன்று என்னதான் நடந்துச்சு..? இங்கிலாந்து கேப்டன் சொன்ன பதில்..!

மோதிக்கொண்ட விராட்கோலி - பட்லர்.. அன்று என்னதான் நடந்துச்சு..? இங்கிலாந்து கேப்டன் சொன்ன பதில்..!


England captain Morgans shares fight between virat and butler

இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதிய கடைசி T20 போட்டியில் ட்லருடன் விராட் கோலி சண்டையிட்டது குறித்து இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கன் பகிர்ந்துள்ளார்.

முன்னதாக நடந்த 4 T20 போட்டிகளில் இரண்டு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று சமநிலையில் இருந்தநிலையில் கடைசி T20 போட்டி மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றது. கடைசி போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி மிகவும் அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 224 ரன்கள் அடித்தது.

virat kholi

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணி வீரர்கள் தொடக்கத்தில் மிகவும் அபாரமாக விளையாடினர். குறிப்பாக ஜோஸ் பட்லர் மற்றும் டேவிட் மலான் ஆகியோர் அதிரடி ஆட்டத்தை ஆடினர். இதனால், இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கான வாய்ப்பும் மிகவும் அதிகரித்தது. ஆனால் இறுதியில் இந்திய அணியின் அபரா பந்துவீச்சினால் இந்திய அணி வெற்றிபெற்று தொடரை கைப்பற்றியது.

இந்நிலையில் 13 வது ஓவரை இந்திய அணி வீரர் புவனேஷ்வர் குமார் வீசிய நிலையில், பவுண்டரி அடிக்க எண்ணி, ஓங்கி அடித்த பட்லர், சிக்ஸ் லைனுக்கு அருகே பாண்டியாவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இக்கட்டான நிலையில் பட்லரின் விக்கெட் இந்திய அணிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்நிலையில் பட்லர் ஆட்டம் இழந்து வெளியேறியபோது இந்திய அணியின் கேப்டன் கோலி ஏதோ ஆக்ரோஷமாக பேசிக்கொண்டே பட்லரை நோக்கி நகர்ந்தார். அதற்கு பட்லரும் ஏதோ கூற, இறுதியில் நடுவர்கள் வந்து இருவரையும் சமாதானம் செய்து அனுப்பிவைத்தனர்.

இவர்கள் இருவருக்குள்ளும் என்ன நடந்தது? என்ன பிரச்சனை என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில் இருவருக்கும் இடையே அப்படி என்ன நடந்தது? என இங்கிலாந்து கேப்டன் இயன் மோர்கனிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "அங்கு என்ன நடந்தது என்பது குறித்து எனக்கு சரியாக தெரியவில்லை.

பொதுவாக, விராட் கோலி மைதானத்தில் விளையாடும்போது சாதாரணமாகவே ஆக்ரோஷமாக காணப்படுவார். போட்டி இறுக்கமாக இருக்கும் சில நேரங்களில் மோதல்கள் ஏற்படுவது வழக்கம். ஒருவேளை அதுதான் காரணமாக இருக்கும் என நான் நினைக்கிறேன்" என இயன் மோர்கன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விராட்கோலி - பட்லர் இருவரும் ஆக்ரோஷமாக பேசிக்கொள்ளும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.