விளையாட்டு

மைதானத்திற்குள் திடீரென புகுந்த நாய்; தடைபட்ட ஆட்டம்! வைரலாகும் வீடியோ

Summary:

Dog entered into chepauk stadium

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியானது இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 

ஆட்டத்தின் துவக்கத்திலேயே இந்திய அணியின் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா விக்கெட்டினை பறிகொடுத்தனர். பின்னர் ரோகித் சர்மா 19 ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார். 

அதன் பின்னர் ஜோடி சேர்ந்த ஸ்ரேயர் ஐயர் மற்றும் ரிஷப் பந்த் இருவரும் நிதானமாக ஆடி அரைசதத்தினை கடந்தனர். ஆட்டத்தின் 26 ஓவர்கள் முடிவில் திடீரென நாய் ஒன்று மைதானத்திற்குள் புகுந்தது. 


அதனை ஊழியர் ஒருவர் துரத்த முயன்றார். முதலில் எல்லைக் கோட்டை சுற்றி ஓடிய நாய் மீண்டும் மைதானத்தின் நடுவில் ஓடியது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. நாய் பின்னர் வெளியேறியதும் ஆட்டம் தொடர்ந்து நடந்தது. 


Advertisement