வெற்றிக்கு பின் கேப்டனுடன் சேர்ந்து தமிழக வீரர்கள் அடித்துள்ள லூட்டியை பாருங்கள்.. வைரலாகும் வீடியோ..!DK and aswin with Rohit in maintenance jeep

நேற்று புளோரிடாவில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் ஹார்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி 88 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்திய அணி 4-1 என கைப்பற்றியது.

கடைசி போட்டியில் ஆட்டநாயகன் விருதினை அக்சர் படேலும் தொடர் நாயகன் விருதினை அர்ஷ்தீப் சிங்கும் கைப்பற்றினர். ஒவ்வொரு தொடர் முடிவிலும் நடைபெறும் பரிசளிப்பு விழாவை போன்று நேற்றும் நடைபெற்றது.

ind vs WI

இந்தப் பரிசளிப்பு விழாவிற்கு கேப்டன் ரோகித் சர்மாவுடன் தமிழக வீரர்களான அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் வருகை புரிந்த சம்பவம் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது. மைதான ஊழியர்கள் மைதான பராமரிப்பிற்காக பயன்படுத்தக்கூடிய வண்டியை ரோகித் சர்மா இயக்கவும் அஸ்வின் மற்றும் தினேஷ் கார்த்திக் அதில் அமர்ந்தும் வந்துள்ளனர். 

மிகவும் சுவாரசியமான அந்த வீடியோவினை வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் ஆனது தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. வைரலாகும் அந்த வீடியோவை நீங்களும் பாருங்கள்.