விளையாட்டு WC2019

இனி இந்த வீரருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்க வாய்ப்பே இல்லை! இதுதான் காரணமா?

Summary:

Dinesh karthik have less chance to play india team after world cup lose

உலகக்கோப்பை போட்டி ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் பங்கேற்ற உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தேர்வாகியுள்ளது.

தொடக்கத்தில் இருந்து சிறப்பாக விளையாடிவந்த இந்திய அணி அரையிறுதி போட்டியில் 18 ரன்கள் விதியசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியை தழுவியது. இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் தொடக்க மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன்களின் சொதப்பலான ஆட்டம்தான் காரணம்.

இந்நிலையில் அரையிறுதி ஆட்டத்தில் தமிழக வீரர் தினேஷ் கார்த்திக்கிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. தனக்கு கிடைத்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்திக்கொள்ளாமல் தினேஷ் கார்த்திக் 6 ரன்களில் ஆட்டம் இழந்தார். இது இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

இந்நிலையில் தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ் போன்ற வீரர்கள் இனி வரும் ஒருநாள் போட்டிகளில் அணியில் இடம்பெறுவது மிகவும் கடினம் என்றும், உள்ளூர் மற்றும் வெளிநாடு போட்டிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement