விளையாட்டு

கிரிக்கெட் மைதானத்தில் அரங்கேறிய அசம்பாவிதம்; அதிர்ச்சியில் உறைந்த வீரர்கள்!

Summary:

Dimuth karunaratne hit hard by ball in neck

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது இந்த தொடரின் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி மற்றும் 30 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று துவங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 534 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. அதனைத் தொடர்ந்து இரண்டாவது நாளான இன்று இலங்கை அணி பேட்டிங் செய்தது.

ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பேட் கம்மின்ஸ் வீசிய 31 ஆவது ஓவரில் இலங்கை அணியின் திமுத் கருணரத்னேவின் கழுத்தில் பந்து பயங்கரமாக தாக்கியது. பவுன்சராக எழுந்த பந்தை தவிர்க்கும் முடிவில் திமுத் தலையை குனிய முற்பட்டுள்ளார். ஆனால் பந்து எதிர்பார்த்த அளவிற்கு உயரே செல்லாமல் அவரது கழுத்திற்கும் தலைக்கும் இடைப்பட்ட பகுதியில் வேகமாக தாக்கியது. இதில் திமுத் நிலைத்தடுமாறி கீழே சரிந்தார். 

அவர் கீழே விழுந்த காட்சியை பார்த்த வீரர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்தனர். உடனடியாக மருத்துவர்கள் உள்ளே வந்து அவருக்கு முதலுதவி அளித்தனர். பின்பு சற்று நிதானமாக இருந்த திமுத் உடனடியாக மருத்துவமனைக்கு கெண்டுசெல்லப்பட்டார்.

இந்நிலையில் இன்றைய ஆட்ட நேர பேசிய இலங்கை அணியின் பயிற்சியாளர் சந்திக்கா கதுருசிங்கா, திமுத் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், பயப்படும் அளவிற்கு எதுவும் நிகழவில்லை என்றும், விரைவில் அவர் குணமடைவார் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேபோன்று கழுத்தில் பந்து அடித்ததில் தான் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பிலிப் ஹியூஸ் கடந்த 2014ஆம் ஆண்டு உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement