தோனியின் பிறந்தநாளில் அவரின் அட்டகாசமான சிக்சர்கள்; பிசிசிஐ வெளியிட்ட தரமான வீடியோ!

தோனியின் பிறந்தநாளில் அவரின் அட்டகாசமான சிக்சர்கள்; பிசிசிஐ வெளியிட்ட தரமான வீடியோ!


Dhoni's special sixes video on birthday

இந்திய கிரிக்கெட் அணியின் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி தனது 39 ஆவது பிறந்தநாளினை இன்று கொண்டாடுகிறார். சமூக வலைத்தளங்களில் அவரின் ரசிகர்கள் வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

2004 முதல் இந்திய அணிக்காக விளையாடி வரும் தோனி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். மேலும் அவரது தலைமையில் இந்திய அணி அனைத்து ஐசிசி சர்வதேச தொடர்களிலும் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

MS Dhoni

இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். சிறந்த தலைமைப் பண்புகளை கொண்ட தோனி விளையாட்டில் மட்டுமல்லாது பொது வாழ்க்கையிலும் மிகவும் சிறந்தவராக இருந்து வருகிறார்.

இந்நிலையில் அவரது பிறந்தநாளான இன்று தோனியின் சிறந்த சிக்சர்கள் என்ற 1 நிமிட வீடியோவை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.