"உன்னை நான் இயக்கியிருக்க வேண்டும்! மிஸ் பண்ணிட்டேன்!" விஜயிடம் பீல் பண்ணிய பிரபல இயக்குனர்!
கொஞ்சும் தமிழில் தனது மகளுடன் தோனி செய்த செயல், வைரலாகும் வீடியோவால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!
கொஞ்சும் தமிழில் தனது மகளுடன் தோனி செய்த செயல், வைரலாகும் வீடியோவால் ஆச்சரியத்தில் ரசிகர்கள்.!

பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனி, தனது மகளுடன் தமிழில் பேசிக்கொள்ளும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர தோனி, தற்போது விக்கெட் கீப்பராக செயல்பட்டு வருகிறார்.பல சாதனைகளை படைத்து இந்தியாவிற்கு பெருமை சேர்த்த தோனி தற்போது ஒருநாள் போட்டிகளில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
மேலும் ஆஸ்திரேலியத் தொடரில் இருந்து ஓய்வு அளிக்கப்பட்டுள்ள தோனி, தனது குடும்பத்தினருடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
தோனி அவ்வப்போது தனது மகள் ஸிவாவுடன் இருக்கும் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில் தோனி சமீபத்தில் தனது மகள் ஸிவாவுடன் தமிழில் பேசிக்கொள்வது
தமிழில் பேசிக்கொள்வது போன்ற வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அதில் `Greetings in Two languages' என்ற தலைப்பில் தோனி பதிவிட்டுள்ள அந்த வீடியோவில், ``எப்படி இருக்கீங்க?’ என ஸிவா கொஞ்சும் தமிழில் கேட்க, `நல்லா இருக்கேன்’ என தோனி தமிழில் பதிலளிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்பொழுது வைரலாகி வருகிறது.