விளையாட்டு

மீண்டும் கெத்தா களமிறங்கிய தோனி..! தோனி.. தோனி.. மைதானத்தை அதிரவைத்த ரசிகர்கள்..!

Summary:

Dhoni started training in chennai chepak stadium

ஐபில் T20 கிரிக்கெட் போட்டிகள் இந்த மாதம் இறுதியில் தொடங்க உள்ளது. 13வது ஐபிஎல் சீசனில் மொத்தம் 8 அணிகள் மோத உள்ளன. கோப்பையை கைப்பற்ற அணைத்து அணிகளும் தற்போதில் இருந்தே தீவிர பயிற்சியில் இறங்கியுள்ளது.

இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடாத இந்திய அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனி ஐபில் போட்டிகளில் விளையாட உள்ளது தோனி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த மாதம் 29 ஆம் தேதி தொடங்கும் முதல் போட்டியில் மும்பை மற்றும் சென்னை அணிகள் மும்பையில் மோதுகின்றன. இதற்கான பயிற்சியில் ஈடுபடுவதற்காக நேற்று சென்னை வந்த சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்களுடன் இணைந்து தோனி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இன்று தனது பயிற்சியை தொடங்கினார். தோனி காலில் பேட் கட்டிக்கொண்டு முதல் ஷாட்டை அடிக்க, மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி, தோனி என ஆரவாரத்துடன் விசில் அடித்து மைதானத்தை அதிரவைத்துள்ளனர்.


Advertisement