விளையாட்டு

9 வருடம் கழித்து தோனி சிக்சர் அடித்து உலகக்கோப்பையை வென்ற பந்து கண்டுபிடிப்பு!

Summary:

Dhoni sixer ball at worldcup found after 9 years

2011 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இலங்கை அணியின் குலசேகரா பந்தில் சிக்சர் அடித்து இந்திய அணியினை வெற்றிபெற செய்தார். 23 வருடங்களுக்கு பிறகு இந்திய அணி உலகக்கோப்பையை வென்றது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற அந்த இறுதிப்போட்டியில் தோனி சிக்சர் அடித்த அந்த பந்து இத்தனை நாட்கள் யாரிடம் உள்ளது என்பது தெரியாமலே இருந்தது. மிகுந்த தேடுதல் வேட்டைக்கு பிறகு ஹாங்காங்கை சேர்ந்த ஒருவரிடம் அந்த பந்து இருப்பதை கவாஸ்கர் கண்டுபிடித்துள்ளார்.

தற்போது மும்பை கிரிக்கெட் வாரியம் சார்பாக அந்த நபரிடம் இருந்து பந்தினை கேட்டுப் பெறவும் புதிதாக கட்டப்படவுள்ள அருங்காட்சியகத்தில் அதனை வைக்கவுள்ளதாகவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இதற்கு மும்பை கிரிக்கெட் வாரியமும் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும் வான்கடே மைதானத்தில் தோனி அடித்த சிகசர் விழுந்த நாற்காலியையும் கண்டுபிடித்து அதற்கு வித்தியாசமான வர்ணம் தீட்டி பெருமைபடுத்தவும் மும்பை கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது. 


Advertisement