கவனித்தீர்களா அதை? நேற்றைய போட்டியின் நடுவில் தோணி செய்த காரியம்! வைரல் வீடியோ!

கவனித்தீர்களா அதை? நேற்றைய போட்டியின் நடுவில் தோணி செய்த காரியம்! வைரல் வீடியோ!


dhoni-set-fielding-for-bangaledsh-while-batting

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நாளைமுதல் தொடங்க உள்ளது. விராட்கோலி தலைமையிலான இந்திய அணி உலகக்கோப்பை போட்டிக்காக இங்கிலாந்து சென்றுள்ளது. இதற்கு முன்னர் நியூசிலாந்து அணியுடன் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது.

இந்நிலையில் பங்காளதேஸ்க்கு எதிரான நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றிபெற்றது. முதலில் பேட் செய்த இந்திய அணி தொடக்கத்தில் தடுமாறினாலும் ராகுல் மற்றும் தோணி இருவரும் அபாரமாக ஆடி அணியின் எண்ணிக்கையை 359 என்று உயர்த்தினர்.

World cup 2019

இந்நிலையில் தோணி பேட் செய்யும்போது 39வது ஓவரை வங்கதேச வீரர் சபீர் ரஹ்மான் பந்துவீசினார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த தோனி பந்தை வீச வேண்டாம் என்று கூறினார்.  தோனி சிரித்துக் கொண்டே உங்கள் பீல்டர் எங்கே நிற்கிறார் என்று பாருங்கள். நீங்கள் செட் செய்த இடத்தில் அவர் இல்லை என்று கூறினார்.

அதன்பின்னர் பவுலர் மீண்டும் பீல்டரை அழைத்து சரியான இடத்தில் நிற்கவைத்தார். தான் பேட் செய்யும்போது எதிர் அணிக்கு பீல்டிங் செட் செய்த தோனியின் செயல் இணையாயத்தில் விடியோவாக வைரலாகிவருகிறது.