இந்தியா விளையாட்டு

அந்த மனசுதான் சார் கடவுள்!! அப்படி சொல்றதுக்கும் ஒரு மனசு வேணும்ல!! தோனி எடுத்த முடிவு..! குவியும் வாழ்த்துக்கள்

Summary:

ஐபில் தொடர் நிறுத்தப்பட்டுள்ளநிலையில் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் சொந்த ஊர்க

ஐபில் தொடர் நிறுத்தப்பட்டுள்ளநிலையில் இந்திய மற்றும் வெளிநாட்டு வீரர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்பிவருகின்றனர்.

இந்தியாவில் பரவிவரும் கொரோனா பரவல் காரணமாகவும், ஐபில் அணி வீரர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையும் அடுத்து இந்த ஆண்டிற்கான ஐபில் போட்டிகள் நிறுத்தப்படுவதாக பிசிசிஐ அறிவித்துள்ளது. இதனை அடுத்து கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊருக்கு திரும்பி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை அணி நிர்வாக உறுப்பினர் ஒருவர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், அணி வீரர்கள் அனைவரும் அவர்கள் சொந்த ஊரை அடைந்த பிறகே தான் விடுதியில் இருந்து வெளியேறுவேன் எனவும், இந்திய வீரர்களை அவர்களின் சொந்த மாநிலத்திற்கும், வெளிநாட்டு வீரர்களை அவர்களின் சொந்த நாட்டிற்கும் பாதுகாப்பாக அனுப்பவேண்டும் என தோனி கூறியதாக கூறியுள்ளார்.

அனைவரும் தங்கள் ஊர்களுக்கு பாதுகாப்பாக சென்ற பிறகு தான் ராஞ்சிக்கான விமானத்தில் நான் ஏறுவேன் என தோனி கூறியுள்ளார். தோனியின் இந்த நல்ல மனசு அவரை கிரிக்கெட் உலகில் மேலும் புகழடைய செய்துள்ளது.


Advertisement