
Dhoni run out matter goes viral
உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. நேற்று நடந்த முதல் அரையிறுதி ஆட்டத்தில் 18 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி போராடி தோல்வி பெற்றது. இதன்மூலம் நியூசிலாந்து அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.
நேற்றைய ஆட்டத்தில் அடுத்தடுத்து இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் அனைவரும் ஆட்டம் இழக்க, தோணி, ஜடேஜா இருவரும் நிதானமாக விளையாடி இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றன்னர்.
கடைசி நேரத்தில் ஜடேஜா கேட்ச் கொடுத்து வெளியேற, தோணி எப்படியும் இந்திய அணியை வெற்றிபெற செய்துவிடுவார் என ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர். இந்நிலையில் 49 வது ஓவரில் தோணி எதிர்பாராத விதமாக ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார்.
தோணி ஆட்டம் இழந்ததும் இந்திய அணி ரசிகர்கள் அனைவரும் அழ ஆரம்பித்துவிட்டனர். இந்நிலையில் தோணி அவுட் நடுவர்களின் கவனக்குறைவால்தான் நடந்தது என சமூக வலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. அதாவது 3வது பவர் பிளேயான 40 முதல் 50 ஓவரில் 30 மீட்டர் வட்டத்திற்கு வெளியே 5 வீரர்கள் தான் பீல்டிங்குக்கு நிற்க வேண்டும். ஆனால், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 6 பீல்டர்களை நிறுத்தி இருந்தார்.
அவ்வாறு இருந்தால் ஐசிசி விதியின் படி, அந்த பந்து நோ பால் என அம்பயர்களால் அறிவித்திருக்கபட வேண்டும். ஆனால் அதனை கவனிக்காமல் நடுவர்கள் தோனிக்கு ரன் அவுட் கொடுத்துள்ளனர்.
ஒருவேளை தோணி அந்த பந்தில் ரன்னவுட் ஆகாமல் இருந்திருந்தால் நிச்சயம் இந்திய அணி வெற்றிபெற்றிக்கும்.
Advertisement
Advertisement