
dhoni not out in semi final
இந்தியா-நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான உலக்கோப்பை முதல் அரையிறுதி போட்டி நேற்றைக்கு முதல் நாள் தொடங்கி நியூசிலாந்து பேட்டிங் செய்தபோது மழையின் காரணமாக போட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. மேலும் மீதமுள்ள ஆட்டங்கள் நேற்று நடைபெற்ற நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
எளிமையான இலக்கை வென்றுவிடலாம் என்ற கனவோடு பேட்டிங்கை துவங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி கொடுத்தது நியூசிலாந்து அணி. மேலும் அடுத்தடுத்ததாக முக்கிய பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்த நிலையில் இந்திய ரசிகர்கள் நம்பிக்கையை இழந்து மிகுந்த வருத்ததில் இருந்தனர்.
இந்த நிலையில் அவர்களை தொடர்ந்து களமிறங்கிய இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் தோனியும், ஜடேஜாவும் ரசிகர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தி மீண்டும் நம்பிக்கையை கொடுத்தனர். இதனால் இந்திய ரசிகர்கள் வெற்றி பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையை மீண்டும் அடைந்தனர்.
அதற்கேற்றாற்போல சூறாவளியாக களமிறங்கிய ஜடேஜா 4 சிக்ஸருடன், 59பந்திற்கு 77 ரன்கள் எடுத்து அசத்தலாக ஆடிவந்த நிலையில் விக்கெட் இழந்து வெளியேறினார். அதனை தொடர்ந்து தோனியை முழுவதுமாக நம்பியிருந்த நிலையில் 27 பந்தில் 50 ரன்களை எடுத்து ரன்அவுட் ஆனார் . அதனால் இந்திய ரசிகர்கள் மீண்டும் நம்பிக்கையை இழந்து கவலையில் மூழ்கினர். இறுதியில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்நிலையில் டோனி அவுட் இல்லை, அது நோ பால் என தற்போது தெரியவந்துள்ளது.3வது பவர் பிளேயான 40 முதல் 50 ஓவரில் 30 மீட்டர் வட்டத்திற்கு வெளியே 5 வீரர்கள் தான் பீல்டிங்குக்கு நிற்க வேண்டும். ஆனால், நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் 6 பீல்டர்களை நிறுத்தி இருந்தார்.
அவ்வாறு இருந்தால் ஐசிசி விதியின் படி, அந்த பந்து நாட் பால் என அம்பயர்களால் அறிவித்திருக்கபட வேண்டும். ஆனால் அதனை கவனிக்காமல் நடுவர்கள் தோனிக்கு ரன் அவுட் கொடுத்துள்ளனர் என ரசிகர்கள் வேதனை அடைந்துள்ளதாக கூறப்படுகிறது . மேலும் இத்தகைய கவனக்குறைவால், இந்தியாவின் உலக கோப்பை கனவு உடைந்து போனது என ரசிகர்கள் பெரும் வருத்தமடைந்து கொந்தளித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Advertisement
Advertisement