தல தோனிக்காக,பாகிஸ்தான் ரசிகர் தில்லாக செய்த காரியத்தை பார்த்தீங்களா!! வைரலாகும் மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படம்!!

தல தோனிக்காக,பாகிஸ்தான் ரசிகர் தில்லாக செய்த காரியத்தை பார்த்தீங்களா!! வைரலாகும் மெய்சிலிர்க்க வைக்கும் புகைப்படம்!!


dhoni-fan-post-image-in-pakistan

மகேந்திர சிங் தோனி கிரிக்கெட் வீரர் என்பதையும் தாண்டி, தனது நற்பண்புகளால் ரசிகர்களை அவ்வப்போது பெருமளவில் கவர்ந்து வருகிறார். மேலும் ஏன்டா ஒரு சூழ்நிலையிலும் தனது நிலையிலிருந்து மாறாமல் என்றும் கூல் தோனியாகவே   இருப்பார். மேலும் இவருக்கு இந்தியாவில் சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை ஏரளமான ரசிகர்கள் பட்டாளமே உள்ளது.

 மேலும் இந்திய மட்டுமின்றி  உலக அளவில் ரசிகர்களை கொண்ட தோனிக்கு பாகிஸ்தானிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் அதனை உறுதிசெய்யும் வகையில் பாகிஸ்தானை சேர்ந்த ஷேசாத் உல் ஹசான் என்ற தோனி ரசிகர் ஒருவர், பாகிஸ்தான் ஜெர்சி ஒன்றில்  தோனியின் பெயர் மற்றும் 7 என்ற அவரது எண்ணை அச்சிட்டுள்ளார், மேலும் அந்த ஜெர்சியின் புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

dhoniஇதனை கண்ட இந்திய ரசிகர்கள் தோனியை பெருமைப்படுத்தும்வகையில் தனது அன்பை வெளிப்படுத்திய பாகிஸ்தான் ரசிகருக்கு பகைமையை மறந்து  வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் அவர் பாகிஸ்தானில் பெரியளவில்  தோனிக்கு ஏரளமானான தீவிர ரசிகர்கள்  உள்ளனர் எனவும் பதிலளித்துள்ளார்.