சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு உற்சாக செய்தி: அயலான் படத்தின் இசை வெளியீடு விழா அறிவிப்பு.!
செம க்யூட் வீடியோ! தமிழில் பேசும் தல தோனியின் மகள் ஷிவா
செம க்யூட் வீடியோ! தமிழில் பேசும் தல தோனியின் மகள் ஷிவா

இன்று இந்தியாவின் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி. இவர் விளையாட்டில் மட்டுமன்றி இயல்பாகவே நல்ல குணங்களை பெற்றவர். குறிப்பாக பொறுமைக்கும் தலைமைப் பண்புக்கும் எந்த காலத்திற்கும் இவரை எடுத்துக்காட்டாக கூறலாம்.
ஒரு வீரராக, கேப்டனாக மட்டுமல்லாமல் ஒரு கணவராகவும், தந்தையாகவும் தனது பொறுப்புகளை சிறப்பாக செயல்படுத்தி வருபவர் நம்ம தல தோனி.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் என்பதை விட சென்னை ஐபிஎல் அணியின் கேப்டன் தல தோனி என்பதை கூறவே தமிழ் ரசிகர்கள் விரும்புவர். இதனால் இவருக்கும் தமிழ்நாட்டிற்கும் தனி ஒரு ஈர்ப்பு உண்டு. தமிழ்நாட்டு ரசிகர்கள் தோனியை ஒரு தமிழராகவே பார்த்து வருகின்றனர். அந்த வகையில் இவர் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.
தல தோனி தன்னுடைய செல்ல மகள் ஷிவாவுடன் எடுக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அடிக்கடி இணையத்தில் வெளியிட்டு வருவார். அந்த வகையில் இன்று தன்னுடைய மகள் ஷிவா தல தோனியிடம் தமிழில் "எப்படி இருக்கீங்க?" என்று கேட்பதற்கு தல தோனி "நல்லா இருக்கேன்" என்று தமிழிலேயே பதிலளிப்பது போன்ற வீடியோ வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அடிக்கடி தமிழில் பேசும் தல தோனி தன் மகளையும் தமிழில் பேச வைத்திருப்பது தமிழ் ரசிகர்களை மிகவும் உற்சாகப்படுத்தியுள்ளது. தோனி தமிழர்கள் மீதும் தமிழ் மொழி மீதும் எந்த அளவிற்கு மதிப்பு வைத்துள்ளார் என்பது இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.