விளையாட்டு WC2019

தோல்விக்கு பின் தோணி தற்போது எப்படி உள்ளார்? வெளியானது புகைப்படம்!

Summary:

Dhoni current status after india lose against to new zeland

உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த மே 30 ஆம் தேதி தொடங்கி ஒருவழியாக இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. மொத்தம் 10 அணிகள் விளையாடிய இந்த தொடரில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

முதல் சுற்று முடிந்து முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதின. ஆட்டத்தின் நடுவே மழை குறுக்கிட்டதால் ஆட்டம் மறுநாள் மாற்றி வைக்கப்பட்டது. இதில் 240 என்ற எளிமையான இலக்கை தொட முடியாமல் இந்திய அணி 18 ரன்கள் விதியசத்தில் போராடி தோல்வி பெற்றது.

இதில் தல தோணி தன்னால் முடிந்தவரை போராடி இந்திய அணியை வெற்றிக்கு அருகில் அழைத்துவந்து இறுதியில் ரன் அவுட் முறையில் ஆட்டம் இழந்தார். ஆட்டம் இழந்த பிறகு மிகவும் சோர்வான முகத்துடன் வெளியேறிய தோணி இதுவரை எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை.

இந்நிலையில் தோணி எப்படி உள்ளார், தோல்விக்கு பிறகு தோனியின் மனநிலை எப்படி உள்ளது என அவரது ரசிகர்கள் எதிர்பார்த்துவந்த நிலையில் இங்கிலாந்தில் இருக்கும் தோணி தனது ரசிகர்களுடன் மகிழ்ச்சியாக புகைப்படம் எடுத்து வருகிறார். அதில், ஒருசில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகிவருகிறது. 


Advertisement