நாடு திரும்பும் ஷிகர் தவான் வெளியிட்ட உருக்கமான வீடியோ! கண்ணீர் விடும் இந்திய ரசிகர்கள்!

நாடு திரும்பும் ஷிகர் தவான் வெளியிட்ட உருக்கமான வீடியோ! கண்ணீர் விடும் இந்திய ரசிகர்கள்!


Dhawan shared video about worldcup


உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகள் கடந்த மே 30 தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது. இந்திய அணி இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் அதிரடியாக ஆடி ஆஸ்திரேலியா அணியை வென்றது. அந்த ஆட்டத்தில் இந்திய அணியின் தொடக்க வீரர் தவான் சிறப்பாக விளையாடி 117 ரன் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார்.

இந்நிலையில் ஆத்ரேலியாவுடனான போட்டியில் தவானுக்கு கட்டை விரலில் காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த மூன்று வாரத்திற்கு ஆருக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதனால் தவான் அடுத்த மூன்று வாரத்திற்கு எந்த போட்டிகளிலும் விளையாடமாட்டார் என தெரிவிக்கப்பட்டது. 

இந்தநிலையில் உலகக் கோப்பையில் இருந்து முழுமையாக விலகிய தவான், விரைவில் நாடு திரும்பவுள்ள நிலையில் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், எனக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி. இந்த உலகக் கோப்பையில் இனி ஒரு பகுதியாக நான் இருக்க மாட்டேன் என்று கூறுவதை கஷ்டமாக உணர்கிறேன்.

துரதிருஷ்டவசமாக என்னுடைய கட்டை விரலில் ஏற்பட்ட காயம் சரியான நேரத்தில் குணமடையவில்லை. ஆனால், உலகக் கோப்பை தொடர்ந்து நடக்கும். எனது அணி வீரர்கள், கிரிக்கெட் ரசிகர்கள் மற்றும் நமது நாட்டின் அனைத்து அன்புக்கும் ஆதரவிற்கும் நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். ஜெய் ஹிந்த்! என பதிவிட்டுள்ளார்.