
dawan spends time with family
இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலக கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம் பிடித்திருந்த துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் காயம் காரணமாக திடீரென அணியிலிருந்து நீக்கப்பட்டு ரிஷப் பண்ட் சேர்க்கப்பட்டார்.
தற்போதைய காலகட்டத்தில் சர்வதேச அளவில் தலை சிறந்த துவக்க ஆட்டக்காரர்களில் ஒருவர் ஷிகர் தவான். இந்திய அணிக்கு பல ஆட்டங்களில் அதிரடி துவக்கத்தை ஏற்படுத்திக்கொடுத்த ஷிகர் தவான் உலக கோப்பை தொடரில் பெரும் ஏமாற்றத்தை அளித்தார். இதனால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடி சதம் அடித்தார் ஷிகர் தவான். அந்தப் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. ஆனால் அதே போட்டியில் தான் இந்திய அணிக்கு மிகப் பெரும் அதிர்ச்சியும் காத்திருந்தது. சதமடித்த ஷிகர் தவானின் கட்டைவிரலில் ஏற்பட்ட காயத்தால் அவரால் அடுத்தடுத்த போட்டிகளில் தொடர்ந்து ஆட முடியாத சூழ்நிலை உருவானது.
மூன்று வாரம் ஓய்விற்குப் பிறகு மீண்டும் வருவார் என முதலில் அறிவிக்கப்பட்ட நிலையில் பின்னர் மொத்தமாக உலக கோப்பை தொடரில் இருந்து ஷிகர் தவான் விலகுவதாக அறிவிக்கப்பட்டது. உலகக்கோப்பை அணியில் ஆட முடியாத வேதனையில் இருக்கும் ஷிகர் தவான் தனது குடும்பத்தினருடன் பொழுதுகளை போக்கி ஆறுதல் அடைந்து வருகிறார். தற்பொழுது பூங்கா ஒன்றில் தன்னுடைய மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பகிர்ந்து கொண்ட அவர் மனைவியுடன் இருக்கும் தருணங்களில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதாக பதிவிட்டுள்ளார்.
I'm the happiest when I'm with you. ❤ pic.twitter.com/b0tCZXqq3y
— Shikhar Dhawan (@SDhawan25) July 5, 2019
Advertisement
Advertisement