இன்றைய போட்டிக்கு நடுவே இந்திய வீரருக்காக ஆஸ்திரேலிய அணி வீரர் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ காட்சி..

இன்றைய போட்டிக்கு நடுவே இந்திய வீரருக்காக ஆஸ்திரேலிய அணி வீரர் செய்த காரியம்.. வைரலாகும் வீடியோ காட்சி..


David warner ties hardik pandiya shoelaces viral video

இந்திய அணி வீரர் ஹர்திக் பாண்டியாவின் ஷூ லேசை ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் கட்டிவிட்ட காட்சி தற்போது வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஒருநாள் போட்டி, T20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்நிலையில் இன்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 66 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.

australia vs india

முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 374 ரன்கள் குவித்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி சற்று அதிரடியாக ஆடியும் 50 ஓவர்கள் முடிவில் 308 ரன்கள் மட்டுமே சேர்த்து தோல்வியடைந்தது. இந்திய அணி சார்பாக ஹர்திக் பாண்டியா மிக அதிரடியாக ஆடி 90 ரன்கள் குவித்தார்.

இந்நிலையியல் ஹர்திக் பாண்டியா பேட்டிங் செய்துகொண்டிருந்தபோது அவரது ஷூ லேஸ் அவிழ்ந்து சற்று தடுமாறினார். இதனை பார்த்த எதிரணி வீரர் வார்னர், உடனே ஓடிவந்து ஹர்திக் பாண்டியாவின் ஷூ லேசை கட்டிவிட்டார்.

பொதுவாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் களத்தில் இருந்தாலே, இரண்டு அணி வீரர்களுக்கும் வார்த்தை மோதல்களும், உரசல்களும் அதிகமாக இருக்கும். ஆனால் இன்றைய போட்டியின் போது அனைத்து ஆஸ்திரேலிய அணி வீரர்களும் நடந்துகொண்ட விதம் மற்றும் வார்னரின் இந்த செயல் அனைத்தும் ரசிகர்களிடையே பெரும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளது.

பலரும் வார்னரை பாராட்டிவரும்நிலையில், இந்த வீடியோவை பதிவிட்டு ஸ்பிரிட் ஆஃப் கேம் என்று ஐசிசியும் வார்னரை பாராட்டியுள்ளது.