என்னை மன்னிச்சிடுங்க.! மனம்நொறுங்கிய இந்திய ரசிகர்களுக்கு நன்றி கூறிய டேவிட் வார்னர்.!

என்னை மன்னிச்சிடுங்க.! மனம்நொறுங்கிய இந்திய ரசிகர்களுக்கு நன்றி கூறிய டேவிட் வார்னர்.!


David warner thank to india for cricket event

13-வது உலகக்கோப்பைக்கான கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டம் சில தினங்களுக்கு முன் அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் ஆஸ்திரேலியா அணி இந்தியாவை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. மேலும் 6வது முறையாக உலகக் கோப்பையையும் கைப்பற்றியது.

இந்த போட்டிகளில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 9 போட்டிகளிலும் வெற்றி பெற்று, அரை இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணியையும் தோற்கடித்து தொடர் வெற்றிகளை பெற்றது. இந்த நிலையில் இந்த ஆண்டு உலககோப்பை இந்தியாவிற்குதான் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமே ஏற்பட்டது. ரசிகர்கள் பெரிதும் மனமுடைந்து போனார்கள்.

இந்நிலையில் ரசிகர் ஒருவர், நீங்கள் பல கோடி இந்தியர்களின் நெஞ்சை உடைத்துவிட்டீர்கள் என டேவிட் வார்னருக்கு டேக் செய்திருந்த நிலையில் அவர் தனது எக்ஸ் தளத்தில், “நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அது ஒரு சிறப்பான போட்டி மற்றும் சூழல் நம்ப முடியாததாக இருந்தது. இந்தியா உண்மையில் ஒரு அபாரமான தொடரை நடத்தியுள்ளது. உங்கள் அனைவருக்கும் நன்றி” என பதிவிட்டுள்ளார்.