விளையாட்டு

இன்றைய போட்டிக்கு நடுவே மைதானத்திற்குள் நடனமாடிய வார்னர்.. அதுவும் நம்ம ஊரு ஹிட் பாடலுக்கு.. வைரல் வீடியோ..

Summary:

ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் புட்ட பொம்மா பாடலுக்கு செய்த நடன அசைவு வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் புட்ட பொம்மா பாடலுக்கு செய்த நடன அசைவு வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகிவருகிறது.

ஆஸ்திரேலியா நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று முதல் ஒருநாள் போட்டியில் விளையாடியது. இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 374 ரன்கள் எடுத்தது. பின்ச், ஸ்மித், வார்னர் ஆகியோர் ஆஸ்திரேலிய அணிக்காக சிறப்பாக விளையாடினர்.

இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 308 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இந்திய அணி சார்பாக ஹார்திக் பாண்டியா 90 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இந்நிலையில் ஆஸ்திரேலிய அணி வீரர் வார்னர் பவுண்டரி லைனுக்கு அருகே பீல்டிங் செய்துகொண்டிருந்தபோது புட்ட பொம்மா பாடலுக்கான நடன அசைவுகளை செய்துகாட்டினார்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஒன்ஸ் மோர் வார்னர் என கேட்க அவர் மீண்டும் ஆடினார். இந்த் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.


Advertisement