அப்பா உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க.! டேவிட் வார்னர் மகள் வெளியிட்ட உருக்கமான புகைப்படம்..!

அப்பா உடனே கிளம்பி வீட்டுக்கு வாங்க.! டேவிட் வார்னர் மகள் வெளியிட்ட உருக்கமான புகைப்படம்..!


david-warner-daughter-call-to-hiss-dad

ஐபிஎல் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் கொரோனா காரணமாக ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு உச்சத்தை தொட்டுள்ள நிலையில் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. ஐபிஎல் 2021 தொடரில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு பல ஆண்டுகள் கேப்டனாக இருந்த டேவிட் வார்னர், கேப்டன் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். கேன் வில்லியம்சன் கேப்டனாக நியமிக்கப்பட்டார். இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் ஒன்றில் மட்டுமே ஹைதராபாத் அணி வெற்றி பெற்றுள்ளது. 

இதனை அடுத்து திடீரென கேப்டன் பொறுப்பில் இருந்து வார்னர் விடுவிக்கப்படுவதாக ஹைதராபாத் அணி நிர்வாகம் அறிவித்தது. அடுத்த நடந்த ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி விளையாடியது. ஆனால் அப்போட்டியில் விளையாட ப்ளேயின் லெவனில் வார்னரின் பெயர் இடம்பெறவில்லை. இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

david warnerஐபிஎல் தொடரில் அதிக ரன்களை விளாசியவர் டேவிட் வார்னர், அவருக்கே இந்த நிலைமையா என்று விமர்சனங்கள் எழுந்தன. இதனிடையில் இந்தியாவிலிருந்து யாராக இருந்தாலும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழையக் கூடாது, மீறினால் சிறைத்தண்டனை கடும் அபராதம் என்று பிரதமர் தடை உத்தரவு போட்டார்.

இந்த தடையை அடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் மே 15ம் தேதிக்கு பிறகே சொந்த நாட்டுக்கு திரும்ப முடியும். இந்நிலையில் டேவிட் வார்னர் மகள்  வரைந்த படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டிருந்தார். அதில், அப்பா உடனே கிளம்பி வீட்டுக்கு வந்து விடுங்கள், நாங்கள் உங்களை ரொம்பவும் மிஸ் செய்கிறோம் என்று பதிவிட்டுள்ளார்.