ஹெலோ யாருகிட்ட..... நேருக்கு நேர் எதிரித்து நின்ற வார்னர்-அப்ரிடி.! அடுத்து நடந்தது என்ன.? அரங்கமே அதிர்ச்சி.! வைரல் வீடியோ
பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதலில் நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளும் ‘டிரா’வில் முடிந்தது. இந்த நிலையில் பாகிஸ்தான்-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட போட்டி லாகூரில் உள்ள கடாபி ஸ்டேடியத்தில் இரண்டு தினங்களுக்கு முன்பு தொடங்கியது.
இந்தநிலையில் நேற்றைய ஆட்டத்தின்போது வார்னர் மற்றும் ஷஹீன் அப்ரிடி இருவரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர். ஆஸ்திரேலியாவின் இரண்டாவது இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரின் கடைசி பந்தை ஷஹீன் அப்ரிடி ஒரு ஷார்ட் பாலாக வீசினார், ஆனால் வார்னர் அந்த பந்தை தனது கால்களுக்குக் கீழே இறக்கி தனது விக்கெட்டை காப்பாற்றினார்.
What a way to conclude the day 😄 #BoysReadyHain l #PAKvAUS pic.twitter.com/FafG8lkVTT
— Pakistan Cricket (@TheRealPCB) March 23, 2022
அப்போது ஷஹீன் வார்னரை நோக்கி வர, வார்னரும் அவரை நோக்கி நடந்தார். அடடா எதோ நடக்கப்போகிறது என ரசிகர்கள் எதிர்பார்த்தநிலையில், இறுதியில் வார்னர் சிரித்துவிட, அவரைப் பார்த்து ஷஹீனும் சிரித்துவிட்டார். அப்போது ரசிகர்களின் கூச்சலால் அரங்கமே அதிர்ந்தது. இதனைப் பார்த்த சக வீரர்களும் சிரித்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.