அந்த 2 வீரர்கள் உட்பட மொத்தம் 7 வீரர்களை வெளியே அனுப்பும் சென்னை அணி.. அவருமா லிஸ்ட்ல இருக்காரு..?

அந்த 2 வீரர்கள் உட்பட மொத்தம் 7 வீரர்களை வெளியே அனுப்பும் சென்னை அணி.. அவருமா லிஸ்ட்ல இருக்காரு..?


CSK Plans to release 7 players from csk

2021 ஆம் ஆண்டிற்கான ஐபில் போட்டியில் இருந்து சென்னை அணி தங்கள் அணியில் இருந்து 7 வீரர்களை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 ஆம் ஆண்டிற்கான ஐபில் T20 போட்டிகளை ஒட்டி அடுத்தமாதம் மினி ஏலம் நடைபெற இருக்கும்நிலையில் அணிகள் தங்கள் வீரர்களை விடுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சென்னை அணியில் இருந்து பெரும்பாலான வீரர்கள் விடுக்கப்படலாம் என கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபில் போட்டியில் சென்னை அணி தொடர் தோல்விகளை சந்தித்து, முதல் முறையாக இரண்டாவது சுற்றுக்கு முன்னேற முடியாமல் முதல் சுற்றிலையே வெளியேறியது. இதற்கு காரணம் சென்னை அணியின் மோசமான பேட்டிங் என பலரும் கருத்து தெரிவித்தனர்.

IPL 2021

குறிப்பாக கேதார் ஜாதவ் கடுமையாக நெட்டிசன்களினால் கேலி செய்யப்பட்டார். அதேபோல் சென்னை அணியின் இளம் வீரர்களிடம் ஸ்பார்க் இல்லை என கூறி அணியின் கேப்டன் தோனியும் சர்ச்சையில் சிக்கினார். ஆனால், கடைசி 3 போட்டிகளில் இளைஞர் ருதுராஜ் கெய்க்வாட் பிரமாதமாக ஆடி இளைஞர்கள் யார் என்று தோனிக்கு நிரூபித்துக் காட்டினார்.

இந்நிலையில் இந்தவருடம் ஐபில் போட்டியில் சென்னை அணி தமது அணிக்காக புது வீரர்களை தேர்வு செய்ய முடிவு செய்திருப்பதாகவும், அதற்காக சில வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அந்த வகையில் கேதார் ஜாதவ், இம்ரான் தாஹிர் உட்பட பியூஷ் சாவ்லா, கரண் சர்மா என 7 முதல் 8 வீரர்களை சென்னை அணி விடுவிக்க முடிவு செய்துள்ளது என கூறப்படுகிறது. இம்ரான் தாஹிர் சென்னை அணிக்காக சிறப்பாக விளையாடி இருந்தாலும், கடந்த சீசனில் அவருக்கு பெரிதாக வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் இம்ரான் தாஹிர் வெளியே அனுப்பப்படும் தகவல் சென்னை அணி ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியை கொடுத்தாலும், வேறு வழியில்லை என கூறப்படுகிறது. ஏற்கனவே வாட்சனும் சென்னை அணியில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.