
csk last place in ipl 2020
ஐபிஎல் 13 வது சீசன் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 14போட்டிகள் முடிந்துள்ள நிலையில் மும்பை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.2020 ஐபிஎல் போட்டி கடந்த ஆண்டை போல விறுவிறுப்பாக நக்கவில்லை என்றே கூறலாம். ஐபிஎல் போட்டி என்றாலே சென்னை சூப்பர் கிங்ஸ் அணிதான் கெத்து காட்டும். ஆனால் தற்போது சொதப்பியபடி ஆடி வருகிறது.
14வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு164 ஓட்டங்களை பெற்றது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. 165 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தனர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தியது.
இந்த ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், கிங்ஸ் லெவன் பஞ்சாப் என மொத்தம் 8 அணிகள் விளையாடி வருகின்றன. மும்பை அணி 4 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. சென்னை அணி விளையாடிய நான்கு ஆட்டத்தில் ஒரு போட்டியில் மற்றும் வெற்றிபெற்று 2 புள்ளிகளுடன் புள்ளி பட்டியலில் 8 வது இடத்தில் உள்ளது.
Advertisement
Advertisement