ரொமான்டிக் வெக்கேஷன் வீடியோவை வெளியிட்ட சூர்யா - ஜோதிகா! அழகிய ஜோடியின் காதல் கவர்ந்த வீடியோ இதோ..
சிகிச்சைக்கு பணமின்றி உயிருக்கு போராடும் முன்னாள் கிரிக்கெட் வீரர்!. அள்ளிக்கொடுத்து உதவிய தற்போதைய வீரர்கள்!.

இத்தியாவின் முன்னாள் கிரிகெட்வீரரான ஜேக்கப் மார்ட்டின் 138 முதல் தர போட்டிகளில் விளையாடி 9,192 ரன்கள் எடுத்துள்ளார். இவர் கடந்த 2009-ம் ஆண்டு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு, 2016-17 சீசனில் பரோடா அணிக்கு பயிற்சியாளராகவும் பணியாற்றியுள்ளார்.
46 வயதான ஜேக்கப் பைக்கில் சென்றபோது விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். சாலை விபத்தில் படுகாயம் அடைந்த முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஜேக்கப் மார்ட்டின், சிகிச்சைக்கு போதிய பணமில்லாமல் தவித்து வருகிறார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அவருக்கு சிகிச்சைக்காக நாளொன்றுக்கு சுமார் 70,000 செலவு ஆகின்றது என்று குடும்பத்தினால் மருந்திற்கு பணம் செலுத்த இயலாமல் சிகிச்சையை நிறுத்தி விட்டதாக தகவல்கள் பரவி வந்தன. இதனை அறிந்த பிசிசிஐ சார்பில் ரூ. 5 லட்சமும், பரோடா கிரிக்கெட் சங்கம் சார்பில் ரூ.2.70 லட்சமும் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது
இதனை தொடர்ந்து தற்போது இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி, தன்னால் முடிந்த உதவிகளைச் செய்வதாக தெரிவித்துள்ளார். மேலும் இது குறித்து கங்குலி கூறுகையில், அவர் மிகவும் அமைதியான நபர் என்பது எனக்கு நன்கு நினைவில் இருக்கிறது. மார்ட்டின் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யவதாக தெரிவித்துள்ளார்..
அவரது குடும்பத்தினர் தனியாக இருப்பதாக கவலைப்பட வேண்டாம் எங்களால் முடிந்த உதவிகளைச்செய்கிறோம் என கூறியுள்ளனர்.அதேபோல், ஜாகிர் கான், முனாப் பட்டேல், யூசப் பதான், இர்பான் பதான் உள்ளிட்ட வீரர்களும் உதவி செய்யவதாக தெரிவித்துள்ளனர்.