விளையாட்டு Corono+

சச்சினை தொடர்ந்து யூசுப் பதானையும் விட்டுவைக்காத கொரோனா.! கலக்கத்தில் கிரிக்கெட் வீரர்கள்.!

Summary:

நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல்

நாடு முழுவதும் கொரோனா பரவல் ஓரளவுக்கு குறைந்திருந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிக்க துவங்கியுள்ளது. சமீபத்தில் பல திரைப்பிரபலங்களும், அரசியல் தலைவர்களும், விளையாட்டு வீரர்களும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இந்தநிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சச்சின் டெண்டுல்கருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சச்சின் டெண்டுல்கர் சமீபத்தில் நடந்த சாலை விழிப்புணர்வுக்கான ஓய்வு பெற்ற வீரர்களின் தொடரில் கலந்துகொண்டார். அந்த தொடர் முடிந்த சில தினங்களில் சச்சினுக்கு லேசான அறிகுறிகள் தென்பட்டதால் மேற்கொண்ட பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்நிலையில் சச்சின் தற்போது வீட்டிலேயே தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். சச்சினை தொடர்ந்து அவரது லெஜண்ட் அணியில் விளையாடிய யூசுப் பதானுக்கும்  கொரோனா பாதிப்பு உறுதிசெய்யப்பட்டு உள்ளது. இது குறித்து யூசுப் பதான் அவரது ட்விட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், எனக்கு கொரோனா அறிகுறிகள் லேசாக இருந்ததால் பரிசோதனை மேற்கொண்டேன். அதில் கொரோனா தொற்று உறுதியானது. இதனையடுத்து நான் வீட்டிலேயே என்னை தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டுள்ளார்.


Advertisement