இந்திய விளையாட்டு வீரர்களுக்கு சமையல் செய்த சமையல்காரர் கொரோனாவால் மரணம்! அதிர்ச்சியில் விளையாட்டு ஆணையம்! - TamilSpark
TamilSpark Logo
இந்தியா விளையாட்டு Covid-19

இந்திய விளையாட்டு வீரர்களுக்கு சமையல் செய்த சமையல்காரர் கொரோனாவால் மரணம்! அதிர்ச்சியில் விளையாட்டு ஆணையம்!

பெங்களூரில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் மைதானத்தில் சமையல்காரராக பணியாற்றிய நபர் கடந்த செவ்வாய்க்கிழமை மாரடைப்பால் இறந்துவிட்டார். இறப்பதற்கு முன்பு அவருக்கு எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

இவர் பெங்களூரு விளையாட்டு ஆணைய கட்டிடத்தின் அருகிலேயே தங்கியிருந்தார். மைதானத்தில் வீரர்கள் பயிற்சி மேற்கொள்ளலாம் என அரசு அறிவித்ததையடுத்து பெங்களூருவில் உள்ள மைதானத்தினை திறப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.

இதற்கான கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 25 பேர் பங்கேற்ற அந்த கூட்டத்தில் கொரோனா பாதிக்கப்பட்ட சமையல்காரரும் கலந்துகொண்டுள்ளார்.

மேலும் இந்த மைதானம் தான் இந்திய ஆண்கள் மற்றும் மகளிர் ஹாக்கி அணியினருக்கு முதன்மை பயிற்சி மையம். மேலும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான பல்வேறு தடகள வீரர்களும் அங்கு பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

தற்போது சமையல்காரருக்கு கொரோனா உறுதியானதால் கூட்டத்தில் பங்கேற்றவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும் அங்கு பயிற்சி பெற்ற வீரர்களையும் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.


Advertisement


தொடர்புடைய செய்தி:


TamilSpark Logo