விளையாட்டு

ஒரே ஒரு புகைப்படத்தால் இந்திய ரசிகர்களின் கோபத்திற்கு ஆளான கிறிஸ் கெய்ல்! புகைப்படம் உள்ளே

Summary:

Chris gayle with vijay mallaya fans reaction

மேற்கு இந்திய தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல். அவருக்கு அவரது சொந்த நாட்டில் இருக்கும் ரசிகர்களை விட இந்தியாவில் தான் ரசிகர்கள் அதிகம். 

மைதானத்தில் எந்நேரமும் கூலாக இருக்கும் கெய்ல் அனைத்து அணி வீரர்களுடன் மிகவும் சகஜமாக பழக கூடியவர். எத்தனையோ சாதனைகள் படைத்தாலும் எப்போதும் சாதுவாகவே இருப்பார். இதனால் என்னவோ உலகம் முழுவதிலும் பல ரசிகர்கள் கெயிலுக்கு உள்ளனர். 

கடந்த 12 ஆண்டுகளாக இந்தியாவில் நடைபெற்று வரும் ஐபிஎல் தொடரில் அதிரடி மன்னனாக தனது பங்கை ஆற்றி வருகிறார். கெய்ல் ஆரம்ப காலத்தில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார். பின்னர் தற்போது பஞ்சாப் அணிக்காக ஆடுகிறார். 

ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் உரிமையாளர் விஜய் மல்லையா என்பது அனைவருக்கும் தெரிந்த விசயமே. அதே சமயம் இந்தியாவிற்கு அவர் என்ன செய்துவிட்டு இங்கிலாந்தில் குடியேறியுள்ளார் என்பதும் அனைவரும் அறிந்ததே. 

இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்தில் உலகக்கோப்பை தொடரில் ஆடிய கிறிஸ் கெய்ல் அங்கு தன்னுடைய முன்னாள் உரிமையாளரான விஜய் மல்லையாவை சந்தித்துள்ளார். அப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை கிறிஸ் கெய்ல் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 


இதனைக் கண்ட இந்திய ரசிகர்கள் கிறிஸ் கெய்ல் மீது கோபமடைந்துள்ளனர். குறிப்பாக அனைவரும் கிறிஸ் கெய்லிடம், "எங்கள் நாட்டிற்கு துரோகம் செய்த மல்லையாவுடன் நெருங்கி பழகாதீர்கள். உங்கள் மீது இந்திய ரசிகர்கள் மிகுந்த மதிப்பு வைத்துள்ளோம். இது போன்ற புகைப்படங்களால் இந்தியாவில் உங்கள் மதிப்பு குறைந்தவிடும்" என எச்சரித்துள்ளனர். 


Advertisement